இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), குறைந்தபட்சம் 40 சிஆர்பிஎஃப் ஜவான்களை கொன்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆயுதமேந்திய இந்தியப் படைகளின் நலனுக்காக 20 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 12வது ஐபில் சீசனின் முதல் ஆட்டத்தில் மரியாதைக்கு உரிய இந்திய ராணுவ அதிகாரிகளை (இராணுவக் ஆயுதப்படை மற்றும் விமானப்படை) அழைக்க வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
“ஆம், சிஓஏ 20 கோடி ரூபாய்யை இராணுவ ஆயுதம் மற்றும் விமானப்படை நலன் நிதிக்கு வழங்க ஒப்புதல் அளித்தது. அதன்படி, மகேந்திர சிங் தோனி, விராட் கோஹ்லி இருவரும் ஐபிஎல் துவக்க நாளில், இந்தத் தொகையின் முதல் பகுதியை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் இந்திய டுடே பத்திரிக்கை சந்திப்பில் மேற்கோளிட்டுள்ளார்.
அதே போல, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் மின்னும் ஒளி விளக்குகள் வைத்து துவக்க விழாவை கொண்டாடாமல், அதற்க்காக ஒதுக்கப்படும் தொகையையும் ராணுவ நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
“ஐபிஎல் திறப்பு விழாவின் பட்ஜெட்டில் கடந்த சீசனில் ரூ 15 கோடி இருந்தது. இதனை பிசிசிஐ 20 கோடி ரூபாய் உயர்த்த முடிவு செய்தது. அந்த தொகையை இராணுவ ஆயுதம் மற்றும் பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றிற்கு இந்த தொகை வழங்கப்படும், ” என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலில், பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா ஆயுதப்படைகளின் நலனுக்காக 5 கோடி ரூபாய் நன்கொடையாக பிசிசிஐ இடம் கோரினார். எவ்வளவு நன்கொடைகள் வழங்கப்படும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்று கன்னா மேலும் கூறினார். எவ்வாறாயினும், எமது வீரர்களுக்கு எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் தூங்குவதற்கு உதவுவதற்கு இது மிகச் சிறியது என்று அவர் உணர்ந்தார்.
“CoA நன்கொடைக்காக ஒதுக்கிய தொகை பற்றி எனக்குத் தெரியாது. அது ரூ 20 கோடி என்றால், அது ஒரு பெரிய செய்தி. நமது வீரர்களுக்காக நாம் செய்யக்கூடியது இதுதான், ” என்று கன்னா கூறினார்.