ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டது பி.சி.சி.ஐ
ஐ.பி.எல் 2019ம் ஆண்டு தொடருக்கான முழு அட்டவணையையும் ஐ.பி.எல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி (மார்ச் 23) தொடங்க உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல் மற்றும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், போட்டியைத் திட்டமிடுவதில் சிக்கல் இருந்தது.
இதனால் முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. சென்னை சேப்பாகத்தில் நடைபெற இருக்கும் தொடக்க போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இடையூறு இல்லாமல் போட்டியை நடத்தும் வகையில் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்த ஐ.பி.எல் நிர்வாகிகள் இன்று ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையும் ஐ.பி.எல் இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளனர்.
ஐ.பி.எல் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும் மைதானங்களும், இடங்களும் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஒருசில தினங்களில் அது குறித்தான அறிவிப்பும் வெளியாகலாம் என தெரிகிறது.
| தேதி | அணிகள் | இடம் |
| மார்ச் 23 | சென்னை vs பெங்களூர் | சென்னை |
| மார்ச் 24 | கொல்கத்தா vs ஹைதராபாத் | கொல்கத்தா |
| டெல்லி vs மும்பை | மும்பை | |
| மார்ச் 25 | ராஜஸ்தான் vs பஞ்சாப் | ஜெய்ப்பூர் |
| மார்ச் 26 | டெல்லி vs சென்னை | டெல்லி |
| மார்ச் 27 | கொல்கத்தா vs பஞ்சாப் | கொல்கத்தா |
| மார்ச் 28 | பெங்களூர் vs மும்பை | பெங்களூர் |
| மார்ச் 29 | ஹைதராபாத் vs ராஜஸ்தான் | ஹைதராபாத் |
| மார்ச் 30 | பஞ்சாப் vs மும்பை | மொஹாலி |
| டெல்லி vs கொல்கத்தா | டெல்லி | |
| மார்ச் 31 | ஹைதராபாத் vs பெங்களூர் | ஹைதராபாத் |
| சென்னை vs ராஜஸ்தான் | சென்னை | |
| ஏப்ரல் 1 | பஞ்சாப் vs டெல்லி | மொஹாலி |
| ஏப்ரல் 2 | ராஜஸ்தான் vs பெங்களூர் | ஜெய்ப்பூர் |
| ஏப்ரல் 3 | மும்பை vs சென்னை | மும்பை |
| ஏப்ரல் 4 | டெல்லி vs ஹைதராபாத் | டெல்லி |
| ஏபரல் 5 | பெங்களூர் vs கொல்கத்தா | பெங்களூர் |
| ஏப் 6 | சென்னை vs பஞ்சாப் | சென்னை |
| ஹைதராபாத் vs மும்பை | ஹைதராபாத் | |
| ஏப் 7 | பெங்களூர் vs டெல்லி | பெங்களூர் |
| ராஜஸ்தான் vs கொல்கத்தா | ஜெய்ப்பூர் | |
| ஏப் 8 | பஞ்சாப் vs ஹைதராபாத் | மொஹாலி |
| ஏப் 9 | சென்னை vs கொல்கத்தா | சென்னை |
| ஏப் 10 | மும்பை vs பஞ்சாப் | மும்பை |
| ஏப் 11 | ராஜஸ்தான் vs சென்னை | ஜெய்ப்பூர் |
| ஏப் 12 | கொல்கத்தா vs டெல்லி | கொல்கத்தா |
| ஏப் 13 | மும்பை vsராஜஸ்தான் | மும்பை |
| பஞ்சாப் vs பெங்களூர் | மொஹாலி | |
| ஏப் 14 | கொல்கத்தா vs சென்னை | கொல்கத்தா |
| ஹைதராபாத் vs டெல்லி | ஹைதராபாத் | |
| ஏப் 15 | மும்பை vs பெங்களூர் | மும்பை |
| ஏப் 16 | பஞ்சாப் vs ராஜஸ்தான் | மொஹாலி |
| ஏப் 17 | ஹைதராபாத் vs சென்னை | ஹைதராபாத் |
| ஏப் 18 | டெல்லி vs மும்பை | டெல்லி |
| ஏப் 19 | கொல்கத்தா vs பெங்களூர் | கொல்கத்தா |
| ஏப் 20 | ராஜஸ்தான் vs மும்பை | ஜெய்ப்பூர் |
| டெல்லி vs பஞ்சாப் | டெல்லி | |
| ஏப் 21 | ஹைதராபாத் vs கொல்கத்தா | ஹைதராபாத் |
| பெங்களூர் vs சென்னை | பெங்களூர் | |
| ஏப் 22 | ராஜஸ்தான் vs டெல்லி | ஜெய்ப்பூர் |
| ஏப் 23 | சென்னை vs ஹைதராபாத் | சென்னை |
| ஏப் 24 | பெங்களூர் vs பஞ்சாப் | பெங்களூர் |
| ஏப் 25 | கொல்கத்தா vs ராஜஸ்தான் | கொல்கத்தா |
| ஏப் 26 | சென்னை vs மும்பை | சென்னை |
| ஏப் 27 | ராஜஸ்தான் vs ஹைதராபாத் | ஜெய்ப்பூர் |
| ஏப் 28 | டெல்லி vs பெங்களூர் | டெல்லி |
| கொல்கத்தா vs மும்பை | கொல்கத்தா | |
| ஏப் 29 | ஹைதராபாத் vs பஞ்சாப் | ஹைதராபாத் |
| ஏப் 30 | பெங்களூர் vs ராஜஸ்தான் | பெங்களூர் |
| மே 1 | சென்னை vs கெல்லி | சென்னை |
| மே 2 | மும்பை vs ஹைதராபாத் | மும்பை |
| மே 3 | பஞ்சாப் vs கொல்கத்தா | மொஹாலி |
| மே 4 | டெல்லி vs ராஜஸ்தான் | டெல்லி |
| பெங்களூர் vs ஹைதராபாத் | பெங்களூர் | |
| மே 5 | பஞ்சாப் vs சென்னை | மொஹாலி |
| மும்பை vs கொல்கத்தா | மும்பை |