இந்திய பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், புல்வாமா தாக்குதலின் உயிழந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு இதயபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 14 ம் தேதி நடைபெற்ற தாக்குதலில், 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகம்மது இந்த கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தார்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது தோழமையை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களின் உதவிக்கு அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர். மேலும், இதை அரங்கேற்றிய பாகிஸ்தான் பயங்கரவாத குழுவிற்கு தங்களது எதிர்ப்பையும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு எந்த தொடக்க விழாவும் இல்லை என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. மாறாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 20 கோடி ரூபாய் மகத்தான தொகையை அவர்கள் நன்கொடையாக வழங்கவும் முடிவு செய்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 ஐ துவங்குவதற்கு முன்னதாக இரண்டு நிமிட மௌனத்தை வீரர்கள் ராணுவ வீரர்களுக்கு செலுத்தினர். பின்னர், விராத் கோலி மற்றும் கோ.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இராணுவப் படை நிற தொப்பியை அணிந்து ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 மார்ச் அன்று சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் டிக்கெட் மூலம் பெறும் தொகையை புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. அணி இயக்குனர் ராகேஷ் சிங் புதன்கிழமை இந்த செய்தியை அறிவித்தார். இந்த பரபரப்பான தொடரின் டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய முதல் நாளின் முதல் ஒரு மணிநேரத்திற்குள் விற்பனை ஆகின.

“எங்கள் கேப்டன் தோனி, இந்திய பிராந்திய இராணுவ கெளரவ லெப்டினன்ட் கேனல், காசோலை வழங்குவார்,” ராகேஷ் கூறினார் .
Announcement ?⬇
This is our time to stand up and be counted. We urge everyone to do their bit, however little it maybe.
Donate to CRPF Wives Welfare Association: https://t.co/wiqGmeDLED pic.twitter.com/GMGic4DhZr
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) February 19, 2019
இதற்கிடையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்து. தாக்குதலில் உயிரிழந்த ஐந்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் தளத்தின் உரிமையாளர் தலா ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். கடந்த மாதம் தில்லி கேபிட்டல்ஸ் அணி மார்ச் 26 ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் வசூலாகும் டிக்கெட் வருவாயை நன்கொடையாக அறிவித்துள்ளன.