டேவிட் வார்னரின் சாதனை காலி; புதிய மைல்கல்லை எட்டினார் கிறிஸ் கெய்ல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய போட்டியின் மூலம் கிறிஸ் கெய்ல் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் 4,000 ரன்களை விரைவில் எடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் புதிய ஐபிஎல் சாதனையை இன்று எட்டினார்.
இந்தச் சாதனையை எட்டும் 2வது அயல்நாட்டு வீரரும், 9வது ஐபிஎல் வீரருமாவார் கிறிச் கெய்ல்.
ஜெய்பூரில் இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
112 இன்னிங்ஸ்களில் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4,000 ரன்களை எடுத்து அதிவேக ஐபிஎல் 4000 ரன்கள் வீரரானார். இதற்கு முன்பாக டேவிட் வார்னர் 114 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனை மூலம் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, ஷிகர் தவண், தோனி ஆகியோர் அடங்கிய பட்டியலில் கெய்ல் இணைந்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுலை தவல் குல்கர்னி முதல் ஓவர் 4ம் பந்தில் வெளியேற்றினார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 10 ஓவர்கள் முடிவில் 68/2 என்று ஆடி வருகிறது. கெய்ல் 36 ரன்களுடனும் சர்பராஸ் கான் 7 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.
புதிய நம்பிக்கையில் ரவிசந்திர அஸ்வின்;
போட்டி தொடர்பாக பேசிய அஸ்வின், “புதிதாக நிறைய பேர் வந்துள்ளனர். பல திறமையுடைய இளைஞர்கள் இருக்கின்றனர். புதிய தொடர், புதிய நம்பிக்கை. விக்கெட்டுகள் பெரிய மாற்றத்தை தராது. ஆனாலும் நாங்கள் முதலில் பந்துவீசவே நினைத்தோம். பழைய வரலாறு பற்றி நான் பொருட்படுத்தவில்லை. நாங்கள் தற்போது தெளிவாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;
கிறிஸ் கெய்ல், கே.எல் ராகுல், மாயன்க் அகர்வால், கான், பூரான், மந்தீப் சிங், சாம் குர்ரான், ரவிசந்திர அஸ்வின், முஜிபுர் ரஹ்மான், ராஜ்புட்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;
அஜிக்னியா ரஹானே, ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் த்ரிபதி, கோபால், ஜோஃப்ரா ஆர்சர், ஜெயதேவ் உனாட்கட், குல்கர்னே.