சென்னையுடன் இன்று மல்லுக்கட்டும் மும்பை; வெல்லப்போவது யார்..? 1

சென்னையுடன் இன்று மல்லுக்கட்டும் மும்பை; வெல்லப்போவது யார்..?

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் இந்த தொடரில் இதுவரை 14 போட்டிகள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 15வது போட்டியான இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் போதிய பலத்துடன் உள்ளது.  இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளது.

சென்னையுடன் இன்று மல்லுக்கட்டும் மும்பை; வெல்லப்போவது யார்..? 2

சென்னை அணி இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங்கில் அம்பத்தி ராயூடு தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத அம்பத்தி ராயூடு இன்றைய போட்டியில் இடம்பெறுவதே சந்தேகம் என்று தான் தெரிகிறது அவருக்கு பதிலாக டூ பிளசிஸ் இன்றைய போட்டியில் களம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்றைய போட்டியிலும் அம்பத்தி ராயூடுவிற்கு வாய்ப்பு கிடைத்து அதை அவர் மீண்டும் வீணடிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயூடு நீக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி சென்னை அணியில் இருந்து அம்பத்தி ராயூடு புறக்கணிப்படும் பட்சத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கான இடம் கிடைப்பதே அரிதாக மிக கடினமாக மாறிவிடும்.

சென்னையுடன் இன்று மல்லுக்கட்டும் மும்பை; வெல்லப்போவது யார்..? 3

அதே போல் இன்றைய போட்டியில் சென்னை அணியுடன் மல்லுக்கட்ட உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதல் தொடரில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரே ஒரு எதிரியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. மற்ற அணிகளுடன் சொதப்பினாலும் சென்னை அணியுடனான போட்டி என்று வந்துவிட்டால் சென்னை அணிக்கு சரிக்கு சமமாக நெருக்கடியை கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் சென்னை அணியை எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொறுதிதிருந்து பார்ப்போம்.

சம பலம் கொண்ட இரு அணிகள் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால் இன்றைய போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அதே வேளையில் இரு அணிகள் இடையேயான முந்தைய போட்டி முடிவுகள்,  புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூட அதிக வாய்ப்புகள் உள்ளன.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *