பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் இன்று தொடங்குகிறது.
சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி மோதுகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மொய்ன் அலி, கிராண்ட்ஹோம், டிவிவ்லியர்ஸ் மற்றும் சிம்ரன் ஹெய்ட்மர் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது தவிர சிவம் துபே அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டிக்கான தனது அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே இடம் கொடுத்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் சேன் வாட்சன், பிராவோ மற்றும் பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.
இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி;
பார்த்தீவ் பட்டேல், விராட் கோஹ்லி, மொய்ன் அலி, ஏ.பி டிவில்லியர்ஸ், சிம்ரன் ஹெய்ட்மர், சிவம் துபே, காலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
அம்பத்தி ராயூடு, சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.