டெல்லி அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டர் காயம்!! மாற்று வீரர் அறிவிப்பு!! 1

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்த ஹர்ஷல் படேல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடாமல் இருந்தார். இந்நிலையில் காயம் குணமடையாததால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜெகதீச சுஜித் என்பவரை டெல்லி அணி எடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர் துவங்குவதற்கு முன்னரும் போட்டிகளில் நடுவிலும் பல வீரர்கள் காயமடைந்ததை நாம் கண்டு இருக்கிறோம்.

டெல்லி அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டர் காயம்!! மாற்று வீரர் அறிவிப்பு!! 2

கொல்கத்தா அணிக்கு முக்கியமான இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடருக்கு முன்பாக காயமடைந்ததை அடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன் பிறகு, மும்பை அணிக்கு முதல் போட்டியில் ஆடுகையில் பும்ரா காயமடைந்தார். தற்போது மீண்டும் குணமடைந்து ஆடிவருகிறார். பயிற்சியின்போது மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா காயமடைந்ததை கண்டோம்.

அதேபோல, பஞ்சாப் அணிக்கு கேயில் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் காயமடைந்தனர். சென்னை அணியில் பிராவோ காயமடைந்து 15 நாட்கள் ஆடமுடியாமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்து மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது.

இப்படி இருக்க,  டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்ஷல் படேல், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தார். அதன் பிறகு மூன்று போட்டிகளில் அவரால் அணிக்கு மீண்டும் வர முடியவில்லை. காயம் குணமடைந்து விடும் எதிர்பார்த்த நிலையில், சரிவர குணமடையாததால் ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது விலகியுள்ளார்.

டெல்லி அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டர் காயம்!! மாற்று வீரர் அறிவிப்பு!! 3

அவருக்கு பதிலாக, ஆல்ரவுண்டர் ஜெகதீச சுசீத் டெல்லி அணிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

டெல்லி அணியின் வேகப்பந்து ஆல்ரவுண்டர் காயம்!! மாற்று வீரர் அறிவிப்பு!! 4

ஜெகதீச சுசீத் இதற்கு முன்பு மும்பை இந்தின்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக ஆடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஸ்தக் அலி தொடரில் கர்நாடக அணி வென்றது. அந்த அணியின் ஒரு அங்கமாக இவர் இருந்தார். மேலும், இந்த தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *