ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள் !! 1

ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள்

ஐபிஎல் போட்டிகள் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளன. இதனால் ஐபிஎல் திருவிழா நாடு முழுவதும் களைகட்ட உள்ளது. இம்முறை அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஐந்து இளம் வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

வருண் சவுத்ரி;

இளம் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அவரது அடிப்படை விலை கொடுத்து தனது அணியில் எடுத்து கொண்டது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயப்பட்டுள்ள இவர் 6 விதமாக பந்துவீச கூடியவர் என்று கூறப்படுகிறது. இந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணி இவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுத்து அதை அவரும் சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் உலக கிரிக்கெட்டின் வெளிச்சம் இவர் மீது படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள் !! 2

சிவம் துபே;

ஐ.பி.எல் ஏலம் நடைபெற்றதற்கு முந்தைய நாள் நடைபெற்ற ரஞ்சி தொடரின் ஒரு போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர் விளாசிய இவரை விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடும் போட்டிக்கு பிறகு ஐந்து கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் அள்ளி கொண்டது. ஆல் ரவுண்டரான இவருக்கான போதிய வாய்ப்பு பெங்களூர் அணியில் வழங்கப்படும் பட்சத்தில் இந்த தொடரில் இவர் மிக முக்கிய பங்காற்றுவார் என தெரிகிறது.

ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள் !! 3

இஷான் கிஷான்;

கடந்த தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் கடந்த வருடம் நடைபெற்ற அனைத்து உள்ளூர் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் சிறப்பான ஆட்டம் இந்த ஐ.பி.எல் தொடரிலும் எதிரொலிக்கும் என தெரிகிறது.

ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள் !! 4

சூர்யகுமார் யாதவ்;

கடந்த தொடர்களில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளின் மிடில் ஆர்டரில் களமிறங்கி பொறுப்பான ஆட்டக்காரர் என பெயரெடுத்தவர் சூர்யகுமார் யாதவ், கடந்த இரண்டு ஐ.பி.எல் தொடரிலும் சூர்யகுமார்  யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துவிட்ட நிலையிலும் இன்று வரை இந்திய அணியில் இவருக்கான இடம் எட்டாகனியாகவே உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள் !! 5

நிதிஷ் ராணா;

அதிரடி ஆட்டக்காரரான நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஐ.பி.எல் தொடரிலும் நிதிஷ் ராணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துவிட்ட நிலையிலும் இன்று வரை இந்திய அணியில் இவருக்கான இடம் எட்டாகனியாகவே உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் மாஸ் காட்ட உள்ள ஐந்து வீரர்கள் !! 6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *