கிரிக்கெட் உலகில் ஒப்பிடுவது என்பது இயல்பான ஒன்று. சச்சின் – கோஹ்லி, தோனி கேப்டன் பொறுப்பு – கங்குலி கேப்டன் பொறுப்பு.. என ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இருக்க தற்போது பிரிதிவி ஷாவை, இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரருடன் ஒப்பிட்டுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ப்ரையன் லாரா.
இந்திய அண்டர் 19 அணியின் முன்னாள் கேப்டன் தற்போது சிறப்பாக ஆடி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று, அறிமுக போட்டியிலேயே சதமும் அடித்து அசத்தினார். பின்னர் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்றாலும், பயிற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடரில் தொடர முடியாமல் இந்திய அணிக்கு திரும்ப அனுப்பப்பட்டார்.

அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்து நன்றாக குணமடைந்து, ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காகவும் நன்கு ஆடிவருவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். அதிக அளவில் சிக்ஸர்கள் அடிக்க கொடியவராக ஷா இல்லை என்றாலும், பவர் பிளே ஓவர்களில் எளிதாக பவுண்டரிகளை குவிக்கும் திறமை இவருக்கு மிக இயல்பாக உண்டு.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 99 ரன்கள் அடித்து, துரதிஷ்ட வசமாக 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். முதலில் நிதானமாக துவங்கி, பின்னர் அதிரடியாக ஆடி 99 ரன்கள் வரை சென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இவரின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த வேஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, பிரிதிவி ஷா ஆடுவதை பார்க்கையில், எனக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் போலவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
லாரா கூறியதாவது, நான் பிரித்வி ஷா ஆட்டத்தின் பாணி எனக்கு விரேந்தர் சேவாக்கை நினைவு படுத்துகிறது மற்றும் அவர் இந்த இளம் வயதிலேயே இந்த அளவிற்கு முதிர்ச்சியான நிலையில் ஆடுவது ஆச்சரியமாகக் கருதுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடுகையில் தான் நான் அவரை கவனித்தேன். அந்த தொடரில் நிறைய ரன்கள் அடித்து ஆட்டநாயகனாகவும் தேர்வானார். அப்போதிருந்தே அவரை பின் தொடர்கிறேன்” என்றார் .