பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கும் யுனிவர்சல் பாஸ் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆடியபோது முதுகில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம் என தெரிகிறது. விரைவில் இதுகுறித்த முழு அறிவிப்பை பஞ்சாப் அணியின் உடல்தகுதி பரிசோதனை மருத்துவர் வெளியிடுவார் என அணி நிர்வாகம் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 24வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர், மும்பை கனவை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன்களை கடந்தும் விக்கெட்டை பறிகொடுக்காமல் நேர்த்தியாக ஆடியது. பின்னர் அணியின் ஸ்கோர் 116 ரன்களாக இருக்கும்போது, கெயில் 63 (36) ரன்னில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கே எல் ராகுல் ஆட்டமிழக்காமல் சதமடித்து அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 197 வரை எடுத்து சென்றார்.
பின்னர் ஆடிய மும்பை அணிக்கு நல்ல துவக்கமாக இருந்தாலும், வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது. பின்னர் பொல்லார்ட் அதிரடியில் இறங்கினார். அவர் சிறிது நேரம் பாண்டியா கை கொடுத்தார். பின்னர் அவரும் ஆட்டமிழக்க தோல்வியை தழுவி விடுமோ? என்ற எண்ணம் வர.. அணியை சிக்ஸர் மழைகளாக பொழிந்து மீட்டு எடுத்தார்.
இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைபட அல்சாரி அற்புதமாக ரன் எடுத்து கொடுத்து வெற்றி பெற செய்தார்.மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் பாதியில் ஆடிக்கொண்டிருக்கையில் கெயில் திடீரென முதுகு வழியால் அவதிப்பட்டு, பின்னர் சிறிது மருத்துவ உதவியுடன் பின்னர் தொடர்ந்து ஆடினார். இதனால் பில்ட்டிங் செய்யவும் அவர் வரவில்லை.
இது குறித்து அணியின் கேப்டன் அஸ்வின் கூறுகையில், அவர் முதுகு வலி என கூறினார். மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில், சுளுக்கு சற்று தீவிரமாக இருப்பது தெரியவந்தது. அடுத்த இரு நாட்களுக்கு அவருக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது என்றார் .