டெல்லி vs ஹைதராபாத்: வார்னரின் தாக்குதலை தாக்குபிடிக்குமா டெல்லி? வெல்லப்போவது யார்?? 1

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்த ஐபிஎல் தொடரின் 16வது போட்டியாக நடக்க இருக்கும் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் மோதின.

டெல்லி அணி பஞ்சாப் அணியின் சொந்த மண்ணில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் சொந்த மண்ணில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்திருக்கும். பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ரபாடா ஆகியோர் நல்லநிலையில் காட்சியளிக்கின்றனர்.

டெல்லி vs ஹைதராபாத்: வார்னரின் தாக்குதலை தாக்குபிடிக்குமா டெல்லி? வெல்லப்போவது யார்?? 2

ஹைதராபாத் அணி பெங்களூரு அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பீரத்துடன் உள்ளது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் பார்ஸ்டோவ் இருவரும் சதமடித்து அசத்தினர், மூன்று போட்டிகளிலும் 100 ரன்கள் மேல் பார்ட்னெர்ஷிப் வைத்துள்ளனர், இது அணிக்கு பக்கபலம்.

நேருக்கு நேர் 

போட்டிகள் – 12

ஹைதராபாத் – 8

டெல்லி – 4

சிறப்பாக ஆடும் வீரர்கள்

ஹைதராபாத் – வார்னர், பைர்ஸ்டோவ் மற்றும் சந்தீப் சர்மா.

டெல்லி – பண்ட், பிரிதிவி ஷா, ரபாடா.

சாத்தியமான அணி வீரர்கள்

டெல்லி vs ஹைதராபாத்: வார்னரின் தாக்குதலை தாக்குபிடிக்குமா டெல்லி? வெல்லப்போவது யார்?? 3

டெல்லி அணி – பிருத்வி ஷா, ஷிகார் தவான்,  ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கொலின் இன்கிராம், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல், சந்தீப் லாமணிச்சே, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ஆவேஸ் கான்

ஹைதராபாத் அணி – டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான், முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார் , சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்

டெல்லி vs ஹைதராபாத்: வார்னரின் தாக்குதலை தாக்குபிடிக்குமா டெல்லி? வெல்லப்போவது யார்?? 4

ஒளிபரப்பு விவரங்கள்

டிவி  – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD

லைவ் ஸ்ட்ரீமிங்  – ஹாட் ஸ்டார்

போட்டி நேரம்  – 20:00 IST

பெரும்பாலும், ஹைதராபாத் அணி தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. வெல்லப்போவதும் ஹைதராபாத் தான் என தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *