சென்னை vs பஞ்சாப்; பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை !! 1
Photo by: Arjun Singh / IPL/ SPORTZPICS

சென்னை vs பஞ்சாப்; பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை !!

ஐ.பி.எல் டி.20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 17 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 18வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஹர்தஸ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிரிஸ் கெய்ல் மற்றும் ஆண்டிர்யூ டை ஆகியோர் மீண்டும் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷர்துல் தாகூர், மோஹித் சர்மா மற்றும் டூவைன் பிராவோ ஆகியோருக்கு பதிலாக ஸ்காட் குஜ்ஜிலின், ஹர்பஜன் சிங் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல், கிரிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் குர்ரான், ரவிசந்திர அஸ்வின், ஆண்ட்ரியூ டை, முருகன் அஸ்வின், முகமது ஷமி.

இன்றைய போடிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா,தீபக் சாஹர், ஸ்காட் குஜ்ஜெலிஜின், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *