ஹைதராபாத்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா !! 1

ஹைதராபாத்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள  கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது.

இந்த தொடரின் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய நிலையில், இன்றைய நாளின் முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

ஹைதராபாத்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா !! 2

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான ஹைதராபாத் அணியில் அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் விளையாடாததால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியை வழிநடத்த உள்ளார்.

இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, சந்தீப் சர்மா, விஜய் சங்கர் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில்,சுப்மன் கில், ஆண்ட்ரியூ ரசல், கிரிஸ் லின் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;

டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷாஹிப் அல் ஹசன், விஜய் சங்கர், யூசுப் பதான், ரசீத் கான், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), சந்தீப் சர்மா, சித்தார்த் கவூல்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரியூ ரசல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், லோகி பெர்குசான், பிரசித் கிருஷ்ணா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *