வெற்றி கணக்கை துவங்குமா பெங்களூர்..? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை !! 1

வெற்றி கணக்கை துவங்குமா பெங்களூர்..? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 19 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 20வது போட்டியான இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

உத்தேச பெங்களூர் அணி;

விராட் கோஹ்லி, பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், அக்ஸ்தீப் நத், மார்கஸ் ஸ்டோனிஸ், மொய்ன் அலி, பவன் நெகி, டிம் சவுத்தி, சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி.

உத்தேச டெல்லி அணி;

ஷிகர் தவான், ப்ரிதீவ் ஷா, காலின் முன்ரோ, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ராகுல் திவேதியா, அக்‌ஷர் பட்டேல், கிரிஸ் மோரிஸ், சந்தீப் லமிசேன்னே, காகிஷோ ரபாடா, இஷாந்த் சர்மா.

வெற்றி கணக்கை துவங்குமா பெங்களூர்..? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை !! 2

இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை துவங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிவில்லியர்ஸ், கோஹ்லி போன்ற உலகின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் பெங்களூர் அணி தொடர்ந்து படுதோல்விகளை சந்தித்து வருவது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

இளம் படையான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணி தோல்வியடையும் பட்சத்தில் தனது சொந்த ரசிகர்களாலேயே வெறுக்கப்படும் நிலைக்கு பெங்களூர் அணி தள்ளப்படும்.

வெற்றி கணக்கை துவங்குமா பெங்களூர்..? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை !! 3

டெல்லி அணியையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போட்டி போட்டு தங்களது திறமைகளை நிரூபித்து வரும் டெல்லி அணியின் இளம் வீரர்கள் அனைவரும் இன்றைய போட்டியிலும் மாஸ் காட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இரு அணிகள் இடையேயான முந்தைய போட்டி முடிவுகள் மற்றும் புள்ளி விபரங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் கூடுதலாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *