டெல்லி vs பெங்களூர்; முதலில் பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி
ஐ.பி.எல் டி.20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 19 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 20வது போட்டியான இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி;
பார்த்தீவ் பட்டேல் (விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), ஏ.பி டிவில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மொய்ன் அலி, அக்ஸ்தீப் நத், பவன் நேகி, டிம் சவுத்தி, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;
ப்ரிதீவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ராகுல் திவேதியா, காலின் இன்கிராம், கிரிஸ் மோரிஸ், அக்ஷர் பட்டேல், காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, சந்தீப் லமிசேன்னே.