ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மான்சிங் மைதானத்தில் நடக்க இருக்கும் 21வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியிடம் வென்று புதிய உத்வேகத்துடன் உள்ளன. அதே போல கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியை ரஸ்ஸல் அதிரடியால் வீழ்த்தி வெற்றியை தட்டி சென்றது.
ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்மித் மற்றும் ஷ்ரேயஸ் கோபால் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்கு லின், ராணா மற்றும் ரஸ்ஸல் சிறப்பான நிலையில் உள்ளது அணிக்கு பலம்.

Photo by Saikat Das /SPORTZPICS for IPL
சாத்தியமான ராஜஸ்தான் அணி
அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர் (கீப்பர்), சஞ்சய் சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷீயாஸ் கோபால், தவாள் குல்கர்னி, சுதேசன் மிதுன்
சாத்தியமான கொல்கத்தா அணி
கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & கீப்பர் ), ஆண்ட்ரே ரஸல் , ஷுப்மான் கில், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, பிரசித் கிருஷ்ணா

நேருக்கு நேர்
போட்டிகள் – 18
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 9
ராஜஸ்தான் ராயல்ஸ் – 9
இரு அணிகளும் சமமாக வென்று தக்க பலத்துடன் உள்ளதால் நிச்சயம் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
சாத்தியமாக சிறப்பாக ஆடும் வீரர்கள்
ஜோஸ் பட்லர் – ராஜஸ்தான் ராயல்ஸ் | ஆண்ட்ரே ரசல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஒளிபரப்பு விவரங்கள்
டிவி – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD
லைவ் ஸ்ட்ரீமிங் – ஹாட் ஸ்டார்
போட்டி நேரம் – 20:00 IST
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தை சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணக்கிடப்படுகிறது.
.