வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !! 1

வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார்.

ஐ.பி.எல் 12வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !! 2

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர். பிரித்வி ஷா 7 ரன்களிலேயே வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடினார். எனினும் பொல்லார்டின் அபாரமான கேட்ச்சால் 16 ரன்களில் நடையை கட்டினார். அதன்பின்னர் தவானும் கோலின் இங்கிராமும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். அதிரடியாக ஆடிய இங்கிராம் 32 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவரை அரைசதம் அடிக்கவிடாமல் பென் கட்டிங் அவுட்டாக்கினார். அதன்பிறகு ஷிகர் தவானும் 43 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தை கையில் எடுத்தார் ரிஷப் பண்ட்.

பும்ராஹ்வின் பந்தில் ரிஷப் பண்ட் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ;

https://twitter.com/AnkushD86744515/status/1109854700617302021

முதல் ரன்னை 5வது பந்தில் எடுத்த ரிஷப் பண்ட், அதன்பின்னர் சிக்ஸர்களாக பறக்கவிட்டு, 18வது பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதத்துக்கு பிறகு மேலும் ருத்ரதாண்டவம் ஆடினார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவின் பந்துகளையும் அசால்ட்டாக சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டினார். ரிஷப் பண்ட்டின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி திணறியது. 27 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரிஷப் பண்ட்டின் அதிரடியால் கடைசி 6 ஓவர்களில் 99 ரன்களை குவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. 20 ஓவர் முடிவில் அந்த அணி 213 ரன்களை குவித்து, மும்பை இந்தியன்ஸுக்கு 214 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *