சென்னை vs ஹைதராபாத்; டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை
ஐ.பி.எல் டி.20 தொடரில் ஹைதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 32 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 33வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். தோனிக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டதால் இன்றைய போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அதே போல் தோனியின் இடத்தில் சாம் பில்லிங்ஸும், மிட்செல் சாட்னர் இடத்தில் கரன் சர்மாவும் இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், ரிக்கி புவி மற்றும் அபிசேக் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக யூசுப் பதான் மற்றும் நதீம் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
சேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, கர்ன் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்,
இன்றைய போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;
டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோவ், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரசீத் கான், சபாஷ் நதீம், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அஹமது.