கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 35வது போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோதுகின்றன.

Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS
கொல்கத்தா அணி சொந்த மைதானத்தில் கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் டெல்லி அணிகளிடம் தோல்வியை தழுவியது. அணியில் துவக்கம் சற்று நன்றாக அமைந்தாலும் நடுத்தர பேட்டிங் வரிசை கேள்விக்குறியாகவே உள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக ஆடினாலும் அவருக்கு கை கொடுக்க யாருமில்லை. இதனால் தொடர் தோல்விகளை கொல்கத்தா அணி சந்தித்து வருகிறது.
பெங்களூரு அணிக்கு இந்த தொடர் மிகவும் மோசமாகவே இருந்துள்ளது. ஆடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளை தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் பெங்களூரு அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றில் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளது. இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெல்லும் பட்சத்தில் சற்று கௌரவமான முறையில் தொடரிலிருந்து வெளியேறலாம்.

சாத்தியமான அணிகளின் பட்டியல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – தினேஷ் கார்த்திக் (கேப்டன் & கீப்பர்), பியூஸ் சாவ்லா, ராபின் உத்தப்பா, சுனில் நரைன், ஹாரி கர்னி, ஆண்ட்ரே ரஸல் / கார்லோஸ் ப்ரத்வாட், கிறிஸ் லின், குல்தீப் யாதவ், நிதீஷ் ரானா, பிரசித் கிருஷ்ணா, ஷுப்மான் கில்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஏபி டி வில்லியர்ஸ், விராத் கோஹ்லி (கேப்டன்), அக்ஷ்டீப் நாத், மார்கஸ் ஸ்டைனிஸ், மொயின் அலி, யூசுவேந்திர சாஹல், பவன் நேகி, டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ்

நேருக்கு நேர்
போட்டிகள் – 23
பெங்களூரு அணி – 9
கொல்கத்தா அணி – 14
சாத்தியமான சிறந்த வீரர்கள்
ஆண்ட்ரே ரசல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) | விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஒளிபரப்பு விவரங்கள்
டிவி – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD
லைவ் ஸ்ட்ரீமிங் – ஹாட் ஸ்டார்
போட்டி நேரம் – 20:00 IST