சென்னை vs பெங்களூர்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 1
Photo by Saikat Das /SPORTZPICS for IPL

சென்னை vs பெங்களூர்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை 

ஐ.பி.எல் டி.20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் இடையேயான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 38 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 39வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை vs பெங்களூர்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 2

காயம் காரணமாக கடந்த இரண்டு வாரங்கள் நடைபெற்ற போட்டிகளில் விளையாடாத டூவைன் பிராவோ இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளார். அதே போல் கடந்த போட்டியில் விளையாடாத தோனியும் இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். இதனால் சாம் பில்லிங்ஸ் மற்றும் கர்ண் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் பெங்களூர் அணியிலும் டிவில்லியர்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார், முகமது சிராஜிற்கு பதிலாக உமேஷ் யாதவ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், ஃபேஃப் டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி, கேதர் ஜாதவ், டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

இன்றைய போட்டிக்கான பெங்களூர் அணி;

பார்த்தீவ் பட்டேல், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், அக்ஸ்தீப் நத், மொய்ன் அலி, மார்க்ஸ் ஸ்டோனிஸ், பவன் நேகி, டேல் ஸ்டைன், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், உமேஷ்  யாதவ்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *