ராஜஸ்தான் அணி இந்த ஐபில் தொடரை பஞ்சாப் அணிக்கு எதிராக தனது சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் துவங்குகிறது.
இதில் ராஜஸ்தான் அணியின் உத்தேச ஆடும் 11 வீரர்களின் பட்டியலை காண இருக்கிறோம்.
#1 ஸ்டீவ் ஸ்மித்

தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார் ஸ்மித். இதனால், ராஜஸ்தான் அணி கூடுதல் பலம் பெறும்.
#2 சஞ்சு சாம்சன்

அணிக்கு பல முறை சிறப்பாக துவங்கி கொடுத்திருக்கிறார் இளம் வீரர் சாம்சன். அதிரடியாகவும் ஆடக்கூடியவர்.
#3 அஜிங்க்யா ரஹானே

சிறந்த வீரரான ரஹானே, இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி மீண்டும் இடம்பெறும் முனைப்பில் உள்ளார்.
#4 ஜோஸ் பட்லர்

கடந்த ஆண்டு, ராஜஸ்தான் அணிக்கு துருப்பு சீட்டாக இருந்தார். இவர் துவக்க வீரராகவும் களமிறங்குவார். உலககோப்பைக்கு செல்ல இருப்பதால், இறுதி வரை இவரால் அணியில் நீடிக்க இயலாது.
#5 பென் ஸ்டோக்ஸ்

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர்.
#6 க்ரிஷ்ணப்பா கௌதம்
சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர், கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி நிமிடத்தில் அணியை வெற்றி பெற செய்தார். இம்முறையும் சிறப்பாக ஆடுவார்.
#7 ஜோப்ரா ஆர்ச்சர்

ஆல்ரவுண்டர் ஆர்ச்சர், வேகபந்துவீச்சில் கூடுதல் பலம் கொடுக்க கூடியவர், பேட்டிங்கிலும் அசத்த கூடியவர்.
#8 ஷ்ரேயாஸ் கோபால்
சுழற்பந்துவீச்சாளர் பேட்டிங்கிலும் நன்றாக ஆடுவதால், கீழ் வரிசையில் பலம் சேர்கிறார்.
#9 ஜெயதேவ் உனட்கட்

இடது கை வேகபந்துவீச்சாளர், அதிக விலைக்கு இந்த ஆண்டும் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த முறை அணியை மிகவும் ஏமாற்றினார். இம்முறை சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#10 தவால் குல்கர்னி
அணிக்கு தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் இவர். விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், ரன்களை கட்டுப்படுத்த கூடியவர்.
#11 வருண் ஆரோன்
150கிமி வேகத்தில் பந்துவீசி அசுத்துபவர், இக்கட்டான சூழலில் விக்கெட் வீழ்த்த கூடியவர்.