பஞ்சாப்பிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் !! 1

பஞ்சாப்பிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான்

ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் ராஜஸ்தான் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன.

நான்காவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே இன்று நடக்கிறது. ராஜஸ்தான் கேப்டன் ரஹானே மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் ஆகிய இருவருமே உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளனர். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.

பஞ்சாப்பிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் !! 2

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிக்னியா ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்களாக பூரான், கிறிஸ் கெய்ல், முஜீப் மற்றும் சாம் குர்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கிறிஸ் கெய்ல், கே.எல் ராகுல், மாயன்க் அகர்வால், கான், பூரான், மந்தீப் சிங், சாம் குர்ரான், ரவிசந்திர அஸ்வின், முஜிபுர் ரஹ்மான், ராஜ்புட்.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

அஜிக்னியா ரஹானே, ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் த்ரிபதி, கோபால், ஜோஃப்ரா ஆர்சர், ஜெயதேவ் உனாட்கட், குல்கர்னே.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *