சென்னை vs ஹைதராபாத்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 1

சென்னை vs ஹைதராபாத்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை

ஐ.பி.எல் டி.20 தொடரில் ஹைதராபாத் சென்னை இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை vs ஹைதராபாத்; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை !! 2

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதே போல் ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தனது சொந்த வேலையாக நியூசிலாந்திற்கு சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியை புவனேஷ்வர் குமார் வழிநடத்த உள்ளார். கேன் வில்லியம்சனுக்கு பதிலாக ஷாகிப் அல் ஹசனும், நதீமிற்கு பதிலாக மணிஷ் பாண்டேவும் இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், டூபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, கேதர் ஜாதவ், தோனி, டூவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணி;

டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோ, மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், தீபக் ஹூடா, ரசீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அஹமது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *