கொல்கத்தா vs ராஜஸ்தான்; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா !! 1

கொல்கத்தா vs ராஜஸ்தான்; முதலில் பேட்டிங் செய்கிறது கொல்கத்தா

ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 56 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கரியப்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசீத் கிருஷ்ணா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார், அதே போல் கர்னேவிற்கு பதிலாக கார்லஸ் பிராத்வொய்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆஸ்டன் டர்னருக்கு பதிலாக ஒஸ்னோ தாமஸ் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார், தவால் குல்கர்னேவிற்கு பதிலாக வருண் ஆரோன் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி;

கிரிஸ் லின், சுனில் நரைன், சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ்  கார்த்தி, ரின்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், கார்லஸ் பிராத்வொய்ட், பியூஸ் சாவ்லா, யார்ரா பிரதீவ்ராஜ், பிரசீத் கிருஷ்ணா.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

அஜிக்னியா ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரியான் ப்ராக், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்சர், ஜெயதேவ் உனாட்கட், ஒஸ்னே தாமஸ், வருண் ஆரோன்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *