ஐபிஎல் போட்டியை இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழா என்று கூறலாம். பள்ளிப் பொதுத்தேர்வுகள் முடிவதற்கும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கும் சரியாக இருக்கும். அதேபோன்று இந்த ஆண்டும் பள்ளித்தேர்வுகள் முடிய, ஐபிஎல் தொடங்குகிறது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் என ஒன்று பெருமளவில் பேசப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கூட கிரிக்கெட்டிலிருந்து சிதறாது என்று கூறுகின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்..
2019ஆம் ஆண்டு ஐபிஎல் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இரண்டாவது நாளான ஞாயிறு அன்று 3வது போட்டியாக மும்பை மற்றும் டெல்லி இரு அணிகளும் மோதுகின்றன.
இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு துவங்க இருக்கிறது.
உத்தேச 11 வீரர்கள்:
#1 ரோஹித் சர்மா

மும்பை அணிக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு நல்ல நிலையில் வழிநடத்தி வருகிறார். இம்முறையும் அணியை கோப்பையை வெல்ல அழைத்து செய்வாரா என்று பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
#2 ஏவின் லெவிஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பான துவக்கத்தை கொடுத்திருக்கிறார். டீ காக் அணியில் இணைந்திருந்தாலும் அதிரடியில் லெவிஸ் கெட்டிக்காரர்.
#3 இஷான் கிஷன்

மும்பை அணிக்கு கடந்த சீசன் ஓரிரு போட்டிகளில் எதிர்பாராத விதமாக அரைசதங்கள் அடித்தும், திடீரென அதிரடியை வெளிப்படுத்தியும் அணியில் தொடர்ந்து இடம்பிடித்தார். இம்முறையும் இடம்பெறுவர் என எதிர்பார்க்கபடுகிறது.
#4 சூரியகுமார் யாதவ்

கொல்கத்தா அணியில் ஆடி பிறகு கடந்த சீசனில் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யாதவ், அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டார் என்றே கூரலாம். ஓரிரு போட்டிகளில் துவக்க வீரராகவும் களமிறங்கி கலக்கினார்.
#5 கிரான் பொல்லார்ட்
ndian
இவரது அதிரடியை எடுத்துசொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முக்கிய கட்டங்களில் தனது அதிரடியால் அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்து சென்றுள்ளார்.
#6 ஹர்திக் பாண்டியா

இந்தியாவில் முன்னணி ஆல்ரவுண்டராக வளம் வரும் பாண்டியா முக்கிய பங்காற்றிய பின்னரே இந்திய அணி வாய்ப்பு கிடைத்தது. இதனால் மும்பை அணியில் இவரது ஆட்டம் சற்று தனித்துவமாக இருக்கும்.
#7 க்ருனால் பாண்டியா

மற்றொரு பாண்டியா சகோதரர், மும்பை அணிக்கு ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தவர்களில் ஐவரும் ஒருவர். பந்துவீச்சு மட்டுமல்ல பேட்டிங்கிலும் அசத்துவார்.
#8 மயங்க் மார்கண்டே

கடந்த வருடம் அணியில் இணைந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அனைத்து அணிகளையும் தனது சுழலால் கலங்க வைத்தார். இதனால் இவருக்கு நிச்சயம் இடம் உண்டு.
#9 பென் கட்டிங்

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆண்டு ஹைட்ரபாத் அணிக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிபெற செய்தார். நேர்த்தியாக பந்துவீச்சில் இறங்க கூடியவர்.
#10 ஜஸ்பிரீத் பும்ராஹ்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்ட பின்னரே இந்திய அணியில் இடம் பிடித்தார். மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்து வருகிறார்.
#11 மைக்கேல் மெக்லேகன்
கடந்த சீசனில் மும்பை அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் இருந்துள்ளார்.