ஆல்ரவுண்டர் மொய்ஸஸ் ஹென்றிக்குவஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவதாக இருந்த இவர், பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துரதிஷ்டவசமாக மீண்டும் வெளியில் அமர்த்தப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மொய்ஸஸ் ஹென்றிக்குவஸ் ஐபிஎல் தொடரில் சென்ற ஆண்டு வரை ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டு இதுவரை இந்த ஆண்டு தொடரில் ஆடிய 8 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.

இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதாக இருந்தார் துரதிஸ்டவசமாக பயிற்சியில் ஈடுபட்ட போது அவரின் தொடைப் பகுதியில் சுளுக்கு ஏற்பட்டு உடனடியாக சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் இதனால் அவருக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் டேவிட் மில்லர் இடம் பெற்றார்.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் மற்றும் கேஎல் ராகுல் வழக்கம்போல சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கெயில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த மில்லர் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே எல் ராகுல் அரைசதம் கண்டார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 182 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. அஸ்வின் (17) மற்றும் முஜீப் (0) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணிக்கு 3 விக்கெடுகளை வீழ்த்தினார் ஜோப்ரா ஆர்ச்சர்.