உலக கோப்பையில் தோனி எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் - முன்னாள் கருத்து 1
(Photo Source: Getty Images)

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோனியின் அதிரடி பார்த்த பிறகு உலக கோப்பையில் எதிர் அணிக்கு தோனி சிம்மசொப்பனமாக இருப்பார் என்பது தெளிவாகிறது என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே கருத்து தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தோனியை தொடர்ந்து ஆட வைப்பதற்காக தேர்வுக் குழு கூட்டத்தில் தொடர்ந்து பரிந்துரை செய்து வந்துள்ளார் அன்றைய தேர்வுக்குழு உறுப்பினர் கிரண் மோரே. ஆனால் ராஞ்சியில் இருந்து அதிக அளவு வீரர்கள் இந்திய அணிக்கு சரிவர ஆடாததால் அதனடிப்படையில் தொடர்ந்து மற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களும் தலைவரும் மறுத்து வந்துள்ளனர். இறுதியில் அன்றைய இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தோனியை பரிந்துரை செய்திருக்கிறார் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

உலக கோப்பையில் தோனி எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் - முன்னாள் கருத்து 2

அதன்பிறகு இந்திய அணிக்கு தோனி யின் பங்களிப்பு அனைவரும் அறிந்த ஒன்றே. அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் என்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் இவரையே சேரும்.

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை இருக்க உமேஷ் யாதவ் பந்து வீச வந்தார். அப்பொழுது முதல் பந்தை தோனி பவுண்டரி விளாசினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்றாவது பந்தில் சிக்ஸர்கள் விளாச, 3 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே தேவை பட்டது. 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் சிக்ஸரும் விளாசினார்.

உலக கோப்பையில் தோனி எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் - முன்னாள் கருத்து 3

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, துரதிஷ்ட வசமாக ஷ்ராதுல் தாகூர் ரன் அவுட் ஆனார். இதனால், 1 ரன்னில் பெங்களூரு அணி வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் தோனியின் ஆட்டத்தைக் கண்ட முன்னாள் தெர்வுக் குழு உறுப்பினர் கிரண் மோரே, 2004 ஆம் ஆண்டு தோனியை முதன் முதலாக தேர்வு செய்த போது நடந்த நிகழ்வுகள் நினைவில் வந்து போனதாக குறிப்பிட்டார்.

மேலும் தோனியும் தற்போதைய நிலை இங்கிலாந்து உலகக் கோப்பையில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக அமையும் எனவும் கருத்து தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *