ஐபிஎல் தொடரில் இதுவரை 56 போட்டிகளில் 21 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு வழக்கம்போலவே பஞ்சமே இல்லை.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மன்கெட் செய்ததில் துவங்கி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதி பந்தை வீசிய மலிங்காவின் “நோ பாலை”, கண்டுகொள்ளாத அம்பயர்கள் மற்றும் 2 ஓவருக்கு கிட்டத்தட்ட 50 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் பெங்களுருவில் பந்துவீச்சை ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸலின் ஆட்டம் என சற்றும் பரபரப்பிற்கு குறைவே இல்லை.

மேலும், முதல் முறையாக ஐபிஎல் துவங்கி தொடர்ந்து 6 போட்டிகளை தோற்ற பெங்களூரு அணி, டெல்லி அணியின் 2013 ஆம் ஆண்டின் மோசமான தொடர் 6 தோல்வி சாதனையை சமன் செய்து, இன்னும் ஒரு போட்டி தோற்றால் தொடரில் இருந்து வெளியேற்றம் என கத்தி மேல் இருப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.
பெங்களூரு அணி இம்முறையாவது கோப்பையை வெல்லுமா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் இருக்க முயற்சிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

அதே வேளையில், கொல்கத்தா அணி, டெல்லி அணியிடம் சூப்பர் ஓவர் வரை சென்று தோற்றிருந்தாலும், பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளை வென்று புள்ளிபட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி ரன் ரேட் விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல சென்னை அணியும், மும்பை அணியிடம் தோல்வியை தழுவியிருந்தாலும், பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளை வென்று அதே 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில உள்ளது.
புள்ளிபட்டியலில் முதலிடம் கம்பீரமாக இருந்த ஹைதராபாத் அணி 96 ரன்களுக்கு மும்பை அணியிடம் ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை தழுவியது. இதனால், புள்ளிபட்டியலிலும் அணிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் 21 போட்டிகள் முடிவில் முழு புள்ளிபட்டியல் நாம் இங்கு காண்போம்.
|
அணி
|
போட்டி | வெற்றி | தோல்வி | நெட் ரன்ரேட் |
புள்ளிகள்
|
|||
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 |
கொல்கத்தா |
5 | 4 | 1 | +1,058 | 8 | ||
| 2 |
சென்னை |
5 | 4 | 1 | +0,159 | 8 | ||
| 3 |
ஹைதராபாத் |
5 | 3 | 2 | +1,000 | 6 | ||
| 4 |
மும்பை |
5 | 3 | 2 | +0,342 | 6 | ||
| 5 |
டெல்லி |
6 | 3 | 3 | +0,131 | 6 | ||
| 6 |
பஞ்சாப் |
5 | 3 | 2 | -0,094 | 6 | ||
| 7 |
ராஜஸ்தான் |
5 | 1 | 4 | -0,848 | 2 | ||
| 8 |
பெங்களூர் |
6 | 0 | 6 | -1,453 | 0 | ||







