ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் யார்..?
ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்குகிறது. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. பொதுத்தேர்தல் நடைபெற்றாலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளதால் அணி உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தேர்வு செய்துள்ள நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்-களை நியமித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேடி அப்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இதற்கு முன் 2012 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக பணிபுரிய இருக்கிறார். 2012-ல் புனே வாரியர்ஸ் அணியிலும், 2016 மற்றும் 2017-ல் டெல்லி அணியிலும் பணிபுரிந்துள்ளார். பிக் பாஷ் தொடரிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.
பேடி ஆப்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த தொடருக்கான தனது அணியின் கேப்டன் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டிற்கு தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மீண்டும் இணைவாரா, இணைந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவாரா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் குழுப்பத்தில் உள்ளனர்.
போதாக்குறைக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருதால் அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க ராஜஸ்தான் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிம்பாப்வே தொடரில் சிக்கல்;
நியூசிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. நியூசிலாந்து தொடர் பிப்ரவரி 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அந்த தொடரில் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆட இருந்தது. ஆனால் உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்க உள்ளதால் ஐபிஎல் 12வது சீசன் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்குகிறது. மார்ச் 23ம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ளதால் ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது பாதிக்கப்படும். எனவே அந்த தொடர் உலக கோப்பைக்கு பின்னர் நடத்தப்பட உள்ளது.