ஐபிஎல் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பைக்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதால் சர்வதேச அணிக்கு ஆட செல்கிறார் ஜோப்ரா ஆர்ச்சர்.
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி ஆடிய 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட வரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் வெளியில் அமர்த்தப்பட்டார். இதனால் மும்பை அணிக்கு எதிராக ஆடவில்லை.

மேலும் உலக கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டால், பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஜோஸ் பட்லர் கடைசி சில போட்டிகளில் ஆட முடியாமல் நாடு திரும்புவார்.
ஏற்கனவே, உலகக்கோப்பை செல்லும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. ஒரு வருட தடைக்குப் பிறகு அணியில் இடம் பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் எப்போது வேண்டுமென்றாலும் நாடு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மேலும் ஒரு பலத்த அடி ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலக கோப்பை செல்லும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன் நாடு திரும்புவதற்காக காத்திருக்கிறார். காரணம், வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்து அணியுடன் ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆட இருக்கிறது. சர்வதேச அணிக்காக ஆட அணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்பதால் கடைசி சில போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சர் எதிர்பார்க்க முடியாது.

இப்படி முன்னணி வீரர்கள் நாடு திரும்புவதால் கடைசி கட்டத்தில் ராஜஸ்தான் அணி மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.