பும்ராஹ் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்; பார்த்தீவ் பட்டேல் பாராட்டு !! 1

பும்ராஹ் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்; பார்த்தீவ் பட்டேல் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனான ஜஸ்ப்ரிட் பும்ராஹ் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என பார்த்தீவி பட்டேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே இன்று 11வது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. அந்த அணியில் புதிதாக முகமது நபி என்ற ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டி தொடர்பாக பேசியுள்ள பெங்களூர் அணியின் கீப்பர் பார்திவ் படேல், “இரண்டு போட்டிகள் மட்டும் தான் முடிந்துள்ளது. எங்கள் அணியின் ஓபனிங் பேட்டிங் தொடர்பாக எங்கள் எண்ணத்தில் எந்தத் திட்டமும் இல்லை. நாங்கள் அணியில் விக்கெட் விழுவதை பொறுத்தே பேட்டிங் வரிசையை தீர்மானிக்கிறோம். முதலில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்கள் களமிறங்குவது நன்றாக இருக்கிறது. அதேசமயம் தொடக்கத்தில் இரண்டு பேரும் இடது பேட்ஸ்மேன்களாக இருந்தால், அணிக்கு சிறிய பலம்தான். ஆனால் மொத்தத்தில் இன்றைய போட்டியில் நாங்கள் எந்தத் திட்டத்திலும் இல்லை” என்றார்.

பும்ராஹ் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்; பார்த்தீவ் பட்டேல் பாராட்டு !! 2

அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனுமாக திகழ்ந்து வரும் பும்ராஹ் குறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், பும்ராஹ் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் முதன்மையானவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதே போல் பெங்களூர் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் பும்ராஹ்வை வெகுவாக பாராட்டியுள்ளார்.

பும்ராஹ் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்; பார்த்தீவ் பட்டேல் பாராட்டு !! 3

பும்ராஹ் குறித்து டிவில்லியர்ஸ் பேசியதாவது;

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பும்ரா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் உண்மையாகவே என்னை கடைசி நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு திண்டாட வைத்துவிட்டார். எல்லா கிரெடிட்டும் பும்ராவுக்குத்தான். ஸ்பெஷலான திறமை பெற்றவர் பும்ரா. சின்னசாமி மைதானத்தில் எத்தனையோ பவுலர்களை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன். ஆனால் பும்ராவை போன்றதொரு பவுலரை எதிர்கொண்டதேயில்லை. பும்ரா துணிச்சலானவரும் கூட. நெருக்கடியான சூழலில் நிறைய வீரர்கள் பயந்துவிடுவார்கள். ஆனால் அவரது திட்டத்தில் உறுதியாக இருந்து சிறப்பாகவும் தெளிவாகவும் செயல்படுத்துகிறார் பும்ரா என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் டிவில்லியர்ஸ்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *