ஐபிஎல் தொடருக்கு பின் யுவராஜ் சிங் ஓய்வு?? பதிலளித்த யுவராஜ்!! 1

மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு முதல் போட்டியில் களமிறங்கிய யுவராஜ் மீது அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்தனர். கடந்த ஆண்டு யுவராஜ் மிக மோசமான பேட்டிங்கை வெளிபடுத்தியிருந்தார். வியக்கத்தக்க வகையில், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நீண்டகாலமாகவே கேள்விக்குறியாக உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்கு யுவராஜ் கடந்த 2017 ல் விளையாடினார். பின்னர் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் நன்றாகஆட தவறினார். கடந்த ஆண்டு கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு, உலக கோப்பை வென்ற நட்சத்திரம் வெறும் 10.83 சராசரியுடன் 8 ஆட்டங்களில் 65 ரன்கள் எடுத்ததார், 20 ரன்களைக் அதிகபட்சமாக கொண்டிருந்தார். உண்மையில், மோசமான வருடமாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அவரை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியதன் மூலம் அவருக்கு மீண்டும் ஐபிஎல் தொடரில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை,  நடைபெற்ற முதல் போட்டியிலேயே அதற்க்கு கைமாறு செய்யும் விதமாக அரைசதம் அடித்தார்.

யுவராஜ் டெல்லி தலைநகரங்களுக்கு எதிராக இக்கட்டான நிலையில் அரைசதம் எடுத்தார். 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில், அதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சரும்களும் அடங்கும். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் முடிவில் பேசிய யுவராஜ், வழக்கமான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டது என்றார்.

“ரோகித் (ஷர்மா) ஆரம்பத்தில்ஆட்டமிழந்தார் (இது ஒரு காரணியாக இருந்தது). (குவின்டன்) டி கோக் நன்றாக விளையாடினார் ஆனால் நாங்கள் அவரது விக்கெட்விரைவில் இழந்தோம். (கேரன்) பொல்லார்ட் விரைவில் தனது விக்கெட் இழந்தார். நாங்கள் உண்மையில் முக்கிய பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை பெற முடியவில்லை. நாங்கள் 20-30 ரன்கள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், செய்திருந்தால் விளையாட்டிற்கு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கலாம். 213 ரன்கள் எடுத்தது, டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது, “ என யுவராஜ் சிங் சுட்டிக்காட்டினார்.

யுவராஜ் சிங் கூறியதாவது:

“நான் அங்கு என் நேரம் எடுத்து ஆடினேன். விக்கெட் வீழ்ச்சி இருந்ததால், நானும் அவசரபடாமல் பொறுமை காத்து ஆட முயன்றேன், அதனால் எனக்கு பந்து சரியாக அமைந்தது, பந்தை கணித்து அடித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். “

விவாதம், விரைவில் அவரது ஓய்வு நோக்கி நகர்ந்துள்ளது. யுவராஜ் தனது இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை திரும்புவதற்கான சாத்தியம் இல்லாத நிலை நிலவினாலும், அவர் தனது ஓய்வு பற்றி இன்னும் நினைக்கவில்லை.

“நேரம் வரும்போது, ​​எனது முடிவை யாருடைய உதவியும் இல்லாமல் எடுப்பேன். நான் சச்சினுடனும் இதுகுறித்து பேசி வருகிறேன். அவர் 38-39 வயதை, கடினமான அத்தகைய நேரத்தை கடந்துவிட்டார். அவரிடம் பேசுவது எனக்கு விஷயங்களை எளிதாக்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நான் நிறைய மேடு பள்ளங்களை சந்தித்து இருந்தேன். நான் கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்தேன், ஏனெனில் நான் விளையாட்டை முழு மனதுடன் அனுபவித்தேன். நான் அணிக்காக ஆடவில்லை, இருப்பினும் எனது மனம் கிரிக்கெட் நோக்கி செல்கிறது. அதனால் நான் அனுபவிக்கும் வரை, நான் விளையாடுவேன், ”  என்று ஸ்டார் பேட்ஸ்மேன் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *