சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் உலகக் கோப்பை தொடரின் பயிற்சிக்காக விரைவில் நாடு திரும்புவார் என தெரியவந்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகி சில போட்டிகளை ஆடவில்லை. அதன் பிறகு சற்று குணமடைந்து ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடுவதற்காக ஹைதராபாத் வந்தார்.
ஹைதராபாத் அணி இந்த ஆண்டு தொடரில் இதுவரை ஆடிய 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே இவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. அதிலும் அவர் சரியாக செயல்படாததால், வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக முகமது நபி எடுக்கப்பட்டார்.

அவர் சிறப்பாக செயல்படவே தொடர்ந்து அவரை அணியில் பயன்படுத்தி வந்தனர். இதனால், வெளியில் அமர்த்தப்பட்ட சாகிப் அல் ஹசன் தற்போது உலக கோப்பை செல்லும் 15 பேர் கொண்ட வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ளதால், பயிற்சிக்காக அவர் விரைவில் நாடு திரும்புவார் என தெரியவந்துள்ளது.
ஹைதராபாத் அணியில் இருந்து சாகிப் அல் ஹாசன் வெளியேறினால், சூழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வரிசையில் நபி மட்டுமே மீதம் இருப்பார். அவரும் கடைசி சில போட்டிகளில் ஆட முடியாமல் சர்வதேச அணியின் பயிற்சிக்காக நாடு திரும்புவார். அப்போது ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்படும்.

(Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)
இதனை கருத்தில் கொண்டு நெருக்கடியை தவிர்க்க சர்வதேச அணிக்கு ஆடாத வேறு ஒரு ஆல்ரவுண்டரை ஹைதராபாத் அணி தீவிரமாக தேடி வருகிறது.