பெங்களூர் அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டெல்லி; ட்விட்டர் ரியாக்சன் !! 1

பெங்களூர் அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டெல்லி; ட்விட்டர் ரியாக்சன்

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணியின் தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 3.3 ஓவரில் 35 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 37 பந்தில் 50 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிஷப் பந்த் 7 ரன்னிலும், கொலின் இங்க்ராம் 11 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டெல்லி; ட்விட்டர் ரியாக்சன் !! 2

6-வது வீரராக களம் இறங்கிய ருதர்போர்டு அதிரடியாக விளையாடினார். கடைசி இரண்டு ஓவர்களில் டெல்லி 36 ரன்கள் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. ருதர்போர்டு 13 பந்தில் 3 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணியில் சாஹல் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

https://twitter.com/TanujSi47701251/status/1122471888842829824

https://twitter.com/TanujSi47701251/status/1122471888842829824

https://twitter.com/asbinraj2/status/1122471621891985408

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *