மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மலிங்காவிற்கு அனுமதி !! 1

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மலிங்காவிற்கு அனுமதி

ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட லசீத் மலிங்காவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்வால் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மலிங்காவிற்கு அனுமதி !! 2

பும்ராஹ் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களில் துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு முழு ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வு வழங்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்து வலுத்து வருகிறது.

இந்நிலையில், பும்ராஹ்விற்கு பதிலாக தங்களது அணியில் விளையாடுமாறு இலங்கை வீரர் லசீத் மலிங்காவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அழைப்பு விடுத்தது. இந்திய கிரிகெட் வாரியமும் இலங்கை வாரியத்திடம் மலிங்கா ஐ.பி.எல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட மலிங்காவிற்கு அனுமதி !! 3

இந்தநிலையில், மலிங்கா நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளது.

லசீத் மலிங்கா அடுத்த ஓரிரு தினங்களில் இந்தியா வந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மலிங்கா எங்களது சிறந்த பவுலர் ஒருநாள் போட்டிகளில் அவரது இடம் உறுதியானதுதான், ஆகவே உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறுவார் என்று தலைமைத் தேர்வாளரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஷந்தா டிமெல் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அடுத்ததாக மார்ச் 28ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக பெங்களூருவிலும் மார்ச் 30ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாபை பஞ்சாபிலும் சந்திக்கவுள்ளது. இந்த 2 போட்டிகளுக்கும் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வுப் பரிசீலனைக்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *