சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும்டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் பயிற்சியை முடித்துவிட்டு டேபிள் டென்னிஸ் ஆடினர். டெல்லி கேபிட்டல்ஸ் இந்த வீடியோவை வெளியிடப்பட்டது.
இந்தத் வீடியோவில் எம்.எஸ் தோனி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடுகையில் எடுத்தது. இதற்கிடையில், டெல்லி கேபிட்டல்ஸ் அவர்களுக்கு இடையே ஸ்கோரினை யூகிக்க ரசிகர்களிடம் கேட்டன. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-0 என்ற கணக்கில் தல தோனி வெல்வார் என பதில் அளித்தது.
Let the games beginnn..Oh wait ?
Hey @ChennaiIPL, can you guess the score? ?
Book your tickets for #DCvCSK ? https://t.co/3bYKiBqcU6 @msdhoni#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/2F0In6VzCs
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) March 25, 2019
இரு அணிகள் தங்கள் முதல் விளையாட்டு வெற்றி:
டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு தரப்பினரும் வெற்றியின் மூலம் தங்களது தொடரை துவங்கியுள்ளனர். சென்னை அணி பெங்களூர் அணியை சிறப்பான தாக்குதலின் மூலம் வென்றது. ஆனால், டெல்லி அணி அதிரடியில் மூலம் வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் அணியில் பல தரப்பட்ட வீரர்கள் உள்ளனர். பல அழுத்தமான சூழ்நிலையில் எளிதாக கையாண்டு வென்றுள்ளது. குறிப்பாக, அணியின் தலைவராக தோனி விளங்குவது அசாத்தியமான பலமாக சென்னை அணிக்கு உள்ளது.

மறுபுறம், டெல்லி அணி வான்காடே ஸ்டேடியத்தில் ஒரு சிறந்த ஆட்டத்தை காட்டியது. மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி மிக்க பலத்துடன் உள்ளனர்.
அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் டெல்லி அணி புள்ளிபட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
வீரர்களை பொறுத்தவரை இரு அணி வீரர்களும் கடந்த போட்டியில் இறங்கியது போலவே தொடர்வார்கள். மாற்றம் ஏதும் இருக்காது.
வீரர்களில் காயம் இருந்தால், இறுதி கட்டத்தில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.