வெற்றி பெற்றே தீர வேண்டும்; ரவீந்திர ஜடேஜா உறுதி !! 1

தோல்வியால் துவண்டு போயுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் சென்னை அணியின் ஆல் ரவுண்டரான ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது.

வெற்றி பெற்றே தீர வேண்டும்; ரவீந்திர ஜடேஜா உறுதி !! 2

இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திலேயே உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான 90 சதவீத வாய்ப்புகள் ஏறகனவே பறிபோய்விட்ட நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை வீரர்களை தட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் வகையிலான இடுகையை பகிர்ந்துள்ளார். ‘நம்மால் வெல்ல முடியும், நாம் வெல்ல வேண்டும், நாம் வெல்வோம்’ என ஜடேஜா கூறி உள்ளார்.

வெற்றி பெற்றே தீர வேண்டும்; ரவீந்திர ஜடேஜா உறுதி !! 3

இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இடம்பெற அடுத்து வரும் போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு அவர் உறுதியளித்திருக்கிறார். எனவே, அடுத்து வரும் போட்டியில் சென்னை அணியின் வழக்கமான அதிரடியை பார்க்கலாம்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

சாம் கர்ரான், டூபிளசிஸ், சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ்/ ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கரண் சர்மா, ஹசில்வுட்/ இம்ரான் தாஹிர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *