திடீரென பல்டி அடித்த கங்குலி; ஐ.பி.எல் ரசிகர்களுக்கு கெட்ட செய்தி

ஐ.பி.எல் தொடர் துவங்குவதற்கு முன்பாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஆல் ஸ்டார் போட்டி, ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பிறகே நடைபெறும் என பி.சி.சி.ஐ., தலைவரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அணிகளை இருபிரிவாக பிரித்து ஆட திட்டமிடப்பட்டுள்ள இந்த போட்டி, ஐபிஎல் தொடருக்கு பின்பே நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, போட்டி நடத்தப்படும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திடீரென பல்டி அடித்த கங்குலி; ஐ.பி.எல் ரசிகர்களுக்கு கெட்ட செய்தி !! 1

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 29ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கென ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான சர்வதேச அளவிலான வீரர்களை கடந்த டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஏலத்தின்மூலம் தேர்வு செய்தன. இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே கிரிக்கெட் ரசிகர்களிடம் துவங்கியுள்ளது.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும்வகையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆல் ஸ்டார் போட்டி நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை இரு பிரிவாக பிரித்து இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டடிருந்தது.

திடீரென பல்டி அடித்த கங்குலி; ஐ.பி.எல் ரசிகர்களுக்கு கெட்ட செய்தி !! 2

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆல் ஸ்டார் போட்டி ஐபிஎல் தொடருக்கு பின்பே நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தற்போது அறிவித்துள்ளார். இந்த போட்டியை நடத்துவதற்கான டெண்டர்களை பெறுவதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதால் ஐபிஎல் நிர்வாகக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்ததினத்தையொட்டி அந்நாடு நடத்த திட்டமிட்டுள்ள உலக அணி லெவன் மற்றும் ஆசிய அணி லெவன் போட்டியுடன், தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ள ஆல் ஸ்டார் போட்டி எந்தவகையிலும் ஒத்திருக்காது என்றும் சவுரவ் கங்குலி உறுதிபட தெரிவித்துள்ளார்.

திடீரென பல்டி அடித்த கங்குலி; ஐ.பி.எல் ரசிகர்களுக்கு கெட்ட செய்தி !! 3

ஐபிஎல் போட்டிக்கு பின்பே ஆல் ஸ்டார் போட்டி நடத்தப்படும் என்று கங்குலி அறிவித்துள்ள நிலையில், அந்த போட்டி நடத்தப்படும் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த போட்டி அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோட்ரெடா மைதானத்தில் தான் நடத்தப்படும் என்றும் இதற்கான ஆயத்த பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....