வயசானவுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..? முன்னாள் வீரர் கோபம் !! 1

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணம் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஓபனாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் டி.20 தொடரின் கில்லியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட தொடரில் மிக மிக மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 போட்டிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறியுள்ளது.

வயசானவுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..? முன்னாள் வீரர் கோபம் !! 2

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணம் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் வயது அதிகமான வீரர்களை வைத்து கொண்டு வேறு என்ன செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் பேசுகையில், ““இதை சொல்ல கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. இருப்பினும் சொல்லியாக வேண்டும். நடப்பு சீசனில் இருந்து தற்போதை நிலவரப்படி சென்னை அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளனர்.

வயசானவுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..? முன்னாள் வீரர் கோபம் !! 3

அதனை கடந்த போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சொன்ன வார்த்தைகளை வைத்தே சொல்லி விடலாம். அந்த அணியின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகவே அவர் சொல்லியிருந்தார்.

அதை தான் கடந்த மூன்றாண்டுகளாக எல்லோரும் சொல்லி வருகிறோம். வயசான டீம். ஒரு கட்டத்தில் வயோதிகத்தினால் டீம் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்த்தது தான். இந்த சீசனில் அந்த சிக்கலை சென்னை சந்தித்துள்ளது.

சீனியர் வீரர்களும், ஃபார்ம் அவுட்டும் வீழ்ச்சிக்கு காரணம். டூப்லெஸி மற்றும் தீபக் சஹாரை தவிர மற்ற அனைவரும் சொதப்பி வருகின்றனர். அதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *