கே.எல் ராகுலை கேப்டனாக்கியதற்கு இது தான் காரணம்; அணில் கும்ப்ளே சொல்கிறார் !! 1

கே.எல் ராகுலை கேப்டனாக்கியதற்கு இது தான் காரணம்; அணில் கும்ப்ளே சொல்கிறார்

அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டதற்கான காரணத்தை அனில் கும்ப்ளே தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 13வது சீசன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து கொண்டன.

கே.எல் ராகுலை கேப்டனாக்கியதற்கு இது தான் காரணம்; அணில் கும்ப்ளே சொல்கிறார் !! 2

இதில் மேக்ஸ்வெல், கார்டல் போன்ற நட்சத்திர வீரர்களை கோடிகளை கொட்டி தனது அணியில் எடுத்து கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அடுத்த தொடருக்கான தனது அணியின் கேப்டனாக கே.எல் ராகுலை அறிவித்துள்ளது.

மில்லர், மேக்ஸ்வெல் போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் போது கே.எல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது ஏன் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளரான அனில் கும்ப்ளே இது குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அனில் கும்ப்ளே பேசியதாவது;

ஒரு இந்திய வீரரால் தான் வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைவரையும் ஒருங்கிணைத்து அணியை வழிநடத்த முடியும் என்று நம்புகிறேன், இதன் காரணமாகவே கே.எல் ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ராகுல் பஞ்சாப் அணியின் மிக முக்கிய வீரராகவும் திகழ்ந்து வருவதன் காரணமாகவே அவரை கேப்டனாக நியமித்துள்ளோம். பஞ்சாப் அணியின் நன்மைக்கு மட்டும் அல்ல, கே.எல் ராகுலுக்கும் இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். தலைமை பொறுப்பை ஏற்று அடுத்த கட்டத்திற்கு செல்ல கே.எல் ராகுலுக்கு இதுவே சரியான தருணம். மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக கே.எல் ராகுல் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *