2020க்காண ஐபிஎல் போட்டித் தொடர் துபாய் அமீரகத்தில் இனிதே நடைபெற்று முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுததது.

எளிதான இலக்கு நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டும் தனது வெற்றியை தீர்மானித்தது. இத்துடன் அந்த அணிக்கு ஆறு கோப்பை ரோஹித் சர்மா பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து இரண்டு வருடம் கோப்பையை வென்று ரோஹித் சர்மா பெரும் சாதனை படைத்தார். அதிகமான ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்றும் சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில் இந்த தொடரில் ஒவ்வொரு அணியின் கேப்டன்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கான ரேட்டிங் என்ன என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
[10/10] ரோஹித் சர்மா .

ஐபிஎல் போட்டித் தொடர்கள் ரோஹித் ஷர்மா ஒரு சக்ஸஸ்புள் கேப்டனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய கேப்டன்ஷிப் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தெளிவான முடிவு எடுப்பது, வீரர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவது போன்ற எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி முதலிடத்தில் உள்ளார்.
[9/10]ஸ்ரேயஸ் ஐயர்

2012 க்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆஃப்க்கு முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர். தனது பொறுப்பை உணர்ந்து அணியை மிகத்தெளிவாக வழி நடத்தினார். நேற்று நடந்த போட்டியில் ஸ்ரேயஸ் அரைசதம் கடந்து தனது அணிக்கு ஆறுதல் அளித்தார்..
[5/10]தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் .

தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் இருவரும் கொல்கத்தா அணியின் கேப்டனா செயல்பட்டனர். தினேஷ் கார்த்திக் ஏழு போட்டிகளுக்குத் தலைமை தாங்கி அதில் 4 போட்டியில் வெற்றி பெற்று கொடுத்தார். இவருடைய ஃபீல்டிங் செட்டப் மிகத் துல்லியமாக இருந்தது. பேட்டிங் ஆர்டர் போன்ற அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

மோர்கன் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தார் பேட்டிங்கில் இவருடைய ஆட்டம் அதிரடியாக இருந்தது இவர் தனக்கான பொறுப்பை உணர்ந்து மிக நேர்த்தியாக செயல்பட்டார். இருந்தபோதும் கொல்கத்தா அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மோர்கன் தலைமையில் 7 போட்டிகளில் பங்கெடுத்து மூன்று போட்டிகள் மட்டுமே கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
[8/10]பொலார்ட் மற்றும் டேவிட் வார்னர்

காயம் காரணமாக ரோகித் சர்மா சில போட்டியில் பங்கேற்கவில்லை. அந்நேரத்தில் அணிக்கு ஒரு மாற்று கேப்டனாக பொலார்ட் திகழ்ந்தார் அணியின் போக்கை மாற்றாமல் மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி அழைத்துச் சென்றார்.
பொலார்ட் நான்கு போட்டிகளில் தலைமை தாங்கி தனது அணிக்கு மூன்று போட்டியில் அபார வெற்றி பெற்று தந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக விளங்கினார் இவருடைய புத்திசாலித்தனமான கேப்டன்ஷிப் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை குவாளிஃபையர் வரை கொண்டு சென்றது இவர் எடுக்கும் தெளிவான முடிவு மற்றும் இக்கட்டான நிலை வீரர்களுக்கு கொடுக்கும் அறிவுரையும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு ஹைதராபாத் அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் கருதினர். எதிர்பாராத நிலையில் இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் டெல்லியுடன் தோல்வியைத் தழுவியது.
[6/10]விராட் கோலி

விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன், இவருடைய ஃபீலிங் செட்டப் மிக அருமையாக இருக்கும் என்று ஜாம்பவான்கள் பலர் தெரிவித்தனர். இருந்தபோதும் இவரால் தனது அணிக்காக ஒரு முறை கூட கோப்பையை பெற்று தர முடியவில்லை.
மேலும் இந்த ஆண்டு விராட்கோலி எதிர்பார்த்த அளவுக்கு தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
[7/10]கே எல் ராகுல்

பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக இந்த தொடரில் திகழ்ந்தார். இவர் 14 போட்டிகளில் பங்கெடுத்து 670 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 129 மேலும் இவருடைய ஆவரேஜ் 55. தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்றுத்தந்த கேஎல் ராகுல் எதிர்பாராதவிதமாக சென்னை அணியுடன் தோல்வி அடைந்ததால் பஞ்சாப் அணி பிளே ஆஃப் இல் இருந்து வெளியேறியது.
[5/10] எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ப்ளே ஆஃப் கூட முன்னேறாமல் வெளியேறியது. இதற்கு முக்கிய காரணம்அந்த அணியின் சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது குற்றம்சாட்டினார். மேலும் எம்எஸ் தோனி எதிர்பார்த்த அளவிற்கு இந்த ஆண்டு அவர் சிறப்பாக செயல்படவில்லை 14 போட்டிகளில் பங்கெடுத்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது இவருடைய அவரேஜ் 25 மேலும் ஸ்ட்ரைக் ரேட் 116.28.
[4/10]ஸ்டீவ் ஸ்மித்

கேப்டன் தரவரிசை பட்டியல் கடைசியாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்பட இல்லை 14 போட்டியில் பங்கெடுத்து 313 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவருடைய ஆவரேஜ்25.91 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131.22