சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ராஜஸ்தான் அணி இது தான் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு இருக்கும் இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சென்னை அணியை போன்று தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓரளவிற்கு ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறது, இருந்த போதிலும் தோல்வி மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு கிடைத்து வருகிறது.

சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ராஜஸ்தான் அணி இது தான் !! 2

பேட்டிங்கில் கேப்டன் ஸ்மித், உத்தப்பா ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு நல்ல செய்தி. இருப்பினும் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் ரன்களைச் சேர்க்க மிகவும் திணறி வருகின்றனர். பட்லர் ஆறுதலான ஃபார்மிலேயே உள்ளார். ஆல்ரவுண்டர் திவேதியா மத்திய வரிசைக்கு வலுசேர்த்து வருகிறார். வேகப்பந்து வீச்சில் ஆர்ச்சரும், இளம் வீரர் கார்த்திக் தியாகியும் ஆறுதலாக உள்ளார். உனத்கட் ரன்களை அள்ளி கொடுப்பது அணிக்கு பெரும் பின்னடைவு.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி பிளே ஆஃப்க்கான வாய்ப்பை இழந்து விடும் என்பதால் அனல் பறக்கும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ராஜஸ்தான் அணி இது தான் !! 3

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமான ஜெயதேவ் உனாட்கட் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் ஆரோனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கே), ஜோஸ் பட்லர், ரியன் பரக், ராகுல் தெவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *