இந்தியாவை போல்தான் துபாயில் இருக்கும்! அதனால் நான் சொல்வதைக் கேளுங்கள்! பந்துவீச்சாளர்களுக்கு புவனேஸ்வர் குமார் அறிவுரை!
ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியாவில் 8 மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடைபெறும். ஆனால் வேறு வழியின்றி தற்போது துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானத்தில் மட்டுமே இந்தத் தொடர் நடக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 60 போட்டிகளும் இந்த மூன்று மைதானத்தில்தான் சுழற்சி முறையில் நடைபெறப்போகிறது. இதற்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து ஒன்றரை மணி நேர தூரம் தான். இதன் காரணமாக இரண்டு நாடுகளின் சூழ்நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
பெரிதாக மாற்றம் இருக்காது அதேபோல்தான் வீரர்களும், பயிற்சியாளர்களும் இந்த மைதானங்களை அணுகி வருகிறார்கள். அதற்கேற்றாற்போல் தான் தங்களது வீரர்களை தயார் படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இந்த மைதானங்களின் சீதோசன நிலை குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில்” நாங்கள் எங்களது பந்து வீச்சில் அதிக அளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை. டெக்னிக்கலாக கிட்டதட்ட இந்தியாவில் வீசியது போல் வீசினால் போதும். இங்கு உள்ள சீதோசன நிலை காலநிலை அனைத்தும் இந்திய மைதானங்களில் போல்தான் இருக்கிறது. ஒரே ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் 8 மைதானங்களில் விளையாடினோம் ஆனால் இங்கு மூன்று மைதானங்கள் தான்.
ஆனால் இந்த வருட தொடரில் இரண்டாவது பாதியின் போது மைதானங்கள் மந்தமாகிவிடும். அதேபோல் நாங்கள் கடந்த பல வருடங்களாக குறைந்த ரன்கள் மட்டுமே அடித்தும் எதிரணிகளை கட்டுப்படுத்தி இருக்கிறோம் இது தான் எங்களது பலமே. இந்த வருடமும் அதனை செய்ய முடியுமா என்பதை என்னால் கணிக்க இயலாது” என்று தெரிவித்திருக்கிறார் புவனேஸ்வர் குமார்.