முதல் வீரராக சாம் குர்ரானை அணியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1

முதல் வீரராக சாம் குர்ரானை அணியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டரான சாம் குர்ரானை 5.5 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.

முதல் வீரராக சாம் குர்ரானை அணியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

இதில் கிளன் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், இயான் மோர்கன் போன்ற நட்சத்திர வீரர்களுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக போட்டி கொண்ட நிலையில் வழக்கம் போல அமைதி காத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான சாம் குர்ரான் ஏலத்திற்கு வந்தவுடன் அவருக்காக கடுமையாக போராடி இறுதியில் 5.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இளம் வீரரான சாம் குர்ரான் கடந்த தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *