பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், இன்றைய போட்டி சென்னை அணிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற விட்டாலும், வெற்றி பெறுவதற்கு ஓரளவிற்காவது பாடுபட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தநிலையில், இன்றைய போட்டிக்கான சென்னை அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் மேலும் சில வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படும் என தோனி கடந்த போட்டியிலேயே கூறி இருந்ததால், இன்றைய போட்டியில் மேலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை என்பதால் இன்றைய போட்டியில் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயூடு, ஜெகதீசன், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் தோனிக்கே இடம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் சாம் கர்ரான் ஆகியோருக்கே இடம் கிடைக்கும் என தெரிகிறது.

பந்துவீச்சாளர்களாக வழக்கம் போல் , தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் மற்றும் ஜாஸ் ஹசில்வுட் ஆகியோருக்கே இடம் கிடைக்கும்.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
சாம் கர்ரான், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ருத்துராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஜாஸ் ஹசில்வுட், இம்ரான் தாஹிர்.