தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடி வரும் நிலையில், சென்னை அணியின் வெற்றிக்காக இரண்டு அணிகள் காத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. இம்ரான் தாஹிர் மற்றும் டூபிளசி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சேன் வாட்சன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர், அதே போல் மோனு குமார் நீக்கப்பட்டு கரண் சர்மா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒரு மாற்றத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. பிரசீத் கிருஷ்ணா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரின்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியூ ரசல் இன்றும் விளையாடவில்லை.

ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டதால், சென்னை அணிக்கு இது முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும், சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்றைய போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை கெடுத்து கொள்ளும், அதே போல் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கொல்கத்தா அணியே வழிவகுத்து கொடுக்கும் நிலை ஏற்படும்.

இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை தக்கவைத்து கொள்ளும். அதனால் இந்த ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற வேண்டுமென பெரிய விசில் போட்டுள்ளது ராஜஸ்தான்.
அதனை அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
அதற்கு சென்னை அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் ரிப்ளை கொடுத்துள்ளன.