சென்னை அணியில் தோனி எங்களை இப்படித்தான் ட்ரீட் பண்ணுனார்: சாய் கிஷோர் வெளியிட்ட உண்மை! 1

சென்னை அணியில் வீரர்களை தோனி எவ்வாறு நடத்தினார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் நிறைந்த அணியாக திகழ்ந்து வரும். ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு நினைத்தவாறு அமையவில்லை. 14 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடம் பெற்றது.

முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. வயதான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு எப்படி பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட போது, இளம் வீரர்கள் மத்தியில் இன்னும் துடிப்பான ஆட்டத்தை நான் பார்க்கவில்லை என தோனி பேட்டி அளித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இளம் வீரர்களை நடத்தும் விதம் சரியில்லை என தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட சாய் கிஷோர், சென்னையில் இளம் வீரர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

“சென்னையை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் போதுமான வசதி அளிக்கப்பட்டது என்பது முதலில் உறுதி செய்யப்படும். அணியின் மூத்த வீரர் இளம் வீரர் என்ற பாகுபாடு சற்றும் இருக்காது. வைரஸ் காரணமாக வீரர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டபோது, கேப்டன் தோனி வீரர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்தி உரிய முறையில் மனநிலையை வைத்துக்கொள்ள உதவினார். அணி நிர்வாகமும் இதற்கு பக்கபலமாக இருந்தது. எந்தவிதத்திலும் வீரர்களையும் சோர்வடைய செய்ததில்லை.

என்னை போன்ற இளம் வீரர்களையும் அணியின் மூத்த வீரர் களையும் சரிசமமாக அணி நிர்வாகம் பார்ப்பதே சென்னையை பொறுத்தவரை மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. நல்ல அனுபவமும் கிடைத்தது.” என பேட்டியளித்திருந்தார்.

சாய் கிஷோர், கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அலி தொடரில் 12 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *