ஐபிஎல் தொடர் ஆறு மாதங்கள் கழித்து தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடக்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் இன்று துவங்க இருக்கிறது இன்று இந்திய நேரப்படி 7.30 மணிக்கு ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடர் நடப்பதால் சற்று வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இருக்கும். இதுவரை அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இடையே இதுவரை 28 முறை ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இந்த 28 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 17 போட்டிகளில் வெற்றி பெற்று தனது முன்னிலையை காட்டியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதில் வெறும் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் ஆதிக்கத்தை செலுத்திவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டுமே இவ்வளவு மோசமான ஒரு ரெக்கார்டை வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கெல்லாம் கெத்து காட்டும் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னர் கத்துக்குட்டி ஆக மாறி விடுகின்றது. இதில் மூன்று இறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் தோல்வியடைந்து கோப்பையை பறிகொடுத்ததும் இதில் அடங்கும்.
மும்பை vs சிஎஸ்கே ஹெட் டு ஹெட் | ||||
போட்டி எண் |
போட்டி |
வெற்றி |
||
1 | மும்பை vs சிஎஸ்கே 1 | 2008 IPL | சி.எஸ்.கே. | 6 ரன்கள் |
2 | மும்பை vs சிஎஸ்கே 2 | 2008 IPL | ME | 9 விக்கெட்டுகள் |
3 | மும்பை vs சிஎஸ்கே 3 | 2009 IPL | மும்பை | 19 ரன்கள் |
4 | மும்பை vs சிஎஸ்கே 4 | 2009 IPL | சி.எஸ்.கே. | 7 விக்கெட்டுகள் |
5 | மும்பை vs சிஎஸ்கே 5 | 2010 IPL | மும்பை | 5 விக்கெட் |
6 | மும்பை vs சிஎஸ்கே 6 | 2010 IPL | சி.எஸ்.கே. | 24 ரன்கள் |
7 | மும்பை vs சிஎஸ்கே 7 | 2010 IPL | சி.எஸ்.கே. | 22 ரன்கள் |
8 | மும்பை vs சிஎஸ்கே 8 | 2011 IPL | மும்பை | 8 ரன்கள் |
9 | மும்பை vs சிஎஸ்கே 9 | 2011 CLT | மும்பை | 3 விக்கெட்டுகள் |
10 | மும்பை vs சிஎஸ்கே 10 | 2012 IPL | மும்பை | 8 விக்கெட்டுகள் |
11 | மும்பை vs சிஎஸ்கே 11 | 2012 IPL | மும்பை | 2 விக்கெட் |
12 | மும்பை vs சிஎஸ்கே 12 | 2012 IPL | சி.எஸ்.கே. | 38 ரன்கள் |
13 | மும்பை vs சிஎஸ்கே 13 | 2012 CLT | சி.எஸ்.கே. | 6 ரன்கள் |
14 | மும்பை vs சிஎஸ்கே 14 | 2013 IPL | மும்பை | 9 ரன்கள் |
15 | மும்பை vs சிஎஸ்கே 15 | 2013 IPL | மும்பை | 60 ரன்கள் |
16 | மும்பை vs சிஎஸ்கே 16 | 2013 IPL | சி.எஸ்.கே. | 48 ரன்கள் |
17 | மும்பை vs சிஎஸ்கே 17 | 2013 IPL | மும்பை | 23 ரன்கள் |
18 | மும்பை vs சிஎஸ்கே 18 | 2014 IPL | சி.எஸ்.கே. | 7 விக்கெட்டுகள் |
19 | மும்பை vs சிஎஸ்கே 19 | 2014 IPL | சி.எஸ்.கே. | 4 விக்கெட்டுகள் |
20 | மும்பை vs சிஎஸ்கே 20 | 2014 IPL | சி.எஸ்.கே. | 7 விக்கெட்டுகள் |
21 | மும்பை vs சிஎஸ்கே 21 | 2015 IPL | சி.எஸ்.கே. | 6 விக்கெட்டுகள் |
22 | மும்பை vs சிஎஸ்கே 22 | 2015 IPL | மும்பை | 6 விக்கெட்டுகள் |
23 | மும்பை vs சிஎஸ்கே 23 | 2015 IPL | மும்பை | 25 ரன்கள் |
24 | மும்பை vs சிஎஸ்கே 24 | 2015 IPL | மும்பை | 41 ரன்கள் |
25 | மும்பை vs சிஎஸ்கே 25 | 2018 IPL | சி.எஸ்.கே. | 1 விக்கெட் |
26 | மும்பை vs சிஎஸ்கே 26 | 2018 IPL | மும்பை | 8 விக்கெட்டுகள் |
27 | மும்பை vs சிஎஸ்கே 27 | 2019 IPL | மும்பை | 37 ரன்கள் |
28 | மும்பை vs சிஎஸ்கே 28 | 2019 IPL | மும்பை | 46 ரன்கள் |
29 | மும்பை vs சிஎஸ்கே 29 | 2019 IPL | மும்பை | 6 விக்கெட்டுகள் |
30 | மும்பை vs சிஎஸ்கே 30 | 2019 IPL | மும்பை | 1 ரன் |