அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 1

பெங்களூரு அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கள் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். பெங்களூரு அணியி பல வெற்றிகளுக்கு இவரும் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 2

மேலும் 13 போட்டிகளில் விளையாடி 422 ரன்கள் குவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். போன சீசனில் ஆர்சிபி அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் பார்த்தீவ் பட்டேல் பதிலாக களமிறங்கிய டேவ்தத் படிக்கல் தனது திறமையை நிரூபித்து அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.

Cricket, India, Vengatesh Prasad, , South Africa

இதுபற்றி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் U-19 இந்திய அணியில் தேர்வாளருமான வெங்கடேஷ் பிரசாத் கூறியதாவது தேவ்தத் படிக்கள் விளையாடுவது யுவராஜ் சிங்கின் ஞாபகப்படுத்துகிறது என்று கூறினார்

மேலும் அவர் கூறியதாவது படிக்கள் மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் மிகச் சிறப்பாகக் கையாண்டார். ஒரு வீரரின் முழுத் திறமை என்பது எந்த நிலையிலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆகும். இதில் தன்னை நிரூபித்து விட்டார்.

அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 3

படிக்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எதிர்கால இந்தியாவின் முக்கிய வீரராக இவர் திகழ்வார் என்று கூறியுள்ளார்.

மேலும் தேவ்தத் படிக்கள் கடந்த வருடம் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி மற்றும் முஷ்டாக் அலி டிராபி தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *