தனக்கு முன்னர் ரவீந்தர ஜடேஜா மற்றும் ஷாம் கரன் ஆகியோர் களமிறக்கியது ஏன் ? சரியான காரணம் கூறிய தோனி! 1

தனக்கு முன்னர் ரவீந்தர ஜடேஜா மற்றும் ஷாம் கரன் ஆகியோர் களமிறக்கியது ஏன் ? சரியான காரணம் கூறிய தோனி!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அங்கே நடைபெற்றது. இந்த முதல் போட்டியில் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் என்ற இலக்கை வைத்தது. அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பெரிதாக துவக்கம் கொடுக்க முடியவில்லை.

முதலில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுப்லஸ்ஸிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் நங்கூரமாக  நின்று 115 ரன்கள் குவித்தனர். அதற்குப் பின்னர் வந்த ரவிந்திர ஜடேஜா மற்றும் ஷாம் கரன் அடித்தனர். குறிப்பாக அம்பத்தி ராயுடு தொடங்கிய பின்னர் அடுத்ததாக தோனி தான் வருவார் அல்லது கேதர் ஜாதவ் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.MI vs CSK: MS Dhoni is "genius", says Sam Curran on CSK Skipper's decision to promote him in batting order. Cricket news - Indian Lekhak - Desh Ka Lekhak

வழக்கம்போல் தோனி அந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் பொய்யாக்கி விட்டு, ரவீந்திர ஜடேஜா ஷாம் கரன் என அடுத்தடுத்து வித்தியாசமான வீரர்களை இறக்கி விட்டார். அவர்களும் தங்களது பங்கிற்கு இருவரும் சேர்ந்து 11 பந்துகளில் 27 ரன்கள் அடித்து விட்டனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் வெற்றியும் பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்த இருவரையும் தனக்கு முன்னர் என் காலம் இருக்கினார் என்பது குறித்து தோனி சரியான விளக்கம் கொடுக்கிறார்.

அவர் கூறுகையில் “ஒரு கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா அல்லது ஷாம் கரன் ஆகிய இருவரில் ஒருவரை நாங்கள் முன்னரே அனுப்ப திட்டம் தீட்டி விட்டோம். இருவரும் திடீரென இறங்கி ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் அடித்தால் நன்றாக இருக்கும் என்று  எதிர்பார்த்தோம்.Sam Curran

மேலும் மும்பை அணிகள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது அவர்களுக்கு எதிராகவே இந்த இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்களை பயன்படுத்த நினைத்தோம். இது ஒரு உளவியல்ரீதியான பார்வையாகும். அவர்கள் ஆட்டம் விழுந்து விட்டாலும் இன்னும் இரண்டு வீரர்கள் பேட்டிங் பிடிக்க காத்திருந்தோம்.அவர்கள் இரண்டு பவுண்டரி அடித்து விட்டால் வெற்றி எளிதாகிவிடும். இதன் காரணமாகத்தான் அந்த இருவரையும் முன்னரே இறக்கினனோம்” என்று கூறியிருந்தார் தோனி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *